/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2390.jpg)
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்புப் பணிகளில் உதவியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய ராணுவம் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 8ஆம் தேதி அன்று குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தின்போது, மீட்புப் பணிகளில் உடனடியாகவும், நீடித்த அளவிலும் உதவிகளை அளித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகஇந்திய ராணுவத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். தக்ஷின் பாரத் பகுதிக்கான ராணுவ தலைமை அதிகாரியான லெஃப்டினென்ட் ஜெனரல் அருண் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, "விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்தி அனைவரின் மனதிலும் ஆழமாக இடம்படித்துவிட்டீர்கள். எந்த வகையான உதவிகளை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவை அனைத்தையும் அந்த விபத்து நேரத்தில் உங்கள் தலைமையிலான அரசு வழங்கியது. இதற்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)