மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நாளை மறுநாள் ஆஜராகும் படிதிரைப்படநடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

கடந்தபிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில்பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

Advertisment

 Indian-2 accident... Summon to Kamal Haasan

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்டஇந்த விபத்துதொடர்பாக லைக்கா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தநிலையில்இந்த வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

கடந்த 27 ஆம் தேதி இயக்குனர் ஷங்கர் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், நாளை மறுநாள் இந்தியன்2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் கமலஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடப்பதற்குசில மணித்துளிகளுக்கு முன்பு தான் அங்கேதான் இருந்ததாக கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment