ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், படத்தினை தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் மேலாளர் சுந்தர்ராஜன் விபத்து தொடர்பாக தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த முன் ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமின் மனு மீதான விசாரணையை மார்ச் மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.