பிரதமர் மற்றும் சீன அதிபர் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் மனு மீது அக்டோபர் 3- ஆம் தேதி விசாரிக்கிறது உயர்நீதிமன்றம், மேலும் தமிழக அரசின் மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஆணை.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த நிலையில், பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.