Skip to main content

நாட்டில் பொருளாதார நெருக்கடி- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

india economy quarter 2 gdp down dmk mk stalin tweet


எட்டு முக்கிய ஆதார தொழிற்துறைகளின் உற்பத்தி அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. முக்கியமாக எரிபொருள் உற்பத்தி துறையில் அதிக சரிவு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6% குறைந்துள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக குறைந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி. மத்திய அரசு தனது பொருளாதார செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்னும் ஆறு மாதத்தில் நாட்டு மக்கள் நினைத்து பார்க்காத வலியை அனுபவிக்கப்போகிறார்கள்! – ராகுல் காந்தி

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

Rahul ghandhi

 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 23.4% உள்ளது என்று சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகமும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

இது 2020 -2021 ஆண்டின், முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்வீட்டர் பக்கத்தில் மார்ச் 20 -ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் காணொளியின் ஒரு சிறு பகுதியைப் பதிவு செய்துள்ளார். அதில் “பெரும் சுனாமி போன்ற பொருளாதார பிரச்சனை வரப்போகிறது என அரசாங்கத்தை நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும், இன்னும் ஆறு மதத்தில் நமது நாட்டு மக்கள் நினைத்துகூட பார்க்காத அளவிலான வலியை அனுபவிக்கப்போகிறார்கள்” என அந்தக் காணொளியில் உள்ளது.

 

மேலும் “பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்தே நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அதன் பின்னும் அரசு தவறான கொள்கைகளையே மேற்கொண்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

 

Next Story

பெரும் சரிவில் உள்நாட்டு உற்பத்தி!! கைவிடாத விவசாயம்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

GDP down

 

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக -23.9% என  சரிந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்திருக்கிறது.

 

2020-2021 ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகமும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளது. அதில் இந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடு -23.9% என தெரிவித்துள்ளது.

 

மேலும், ஜி.டி.பி-ன் அளவை துறை ரீதியாகம் வெளியிட்டுள்ளது அதில் விவசாயம் தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி,

 

எரிசக்தி மற்றும் எரிவாயு துறை: -7%

நிலக்கரித்துறை: -23.3%

தொழிற்துறை: -38.1%

உற்பத்தித்துறை: -39.3%

வணிகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு -47%

கட்டுமானத்துறை: -50.3%

 

ஆகியவை சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம் விவசாயத்துறை இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 3.4% அதிகரித்துள்ளது.

 

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் நடந்த 41வது ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.