Advertisment

"வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்"- கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!

india cricket team player natarajan pressmeet at salem district

Advertisment

ஆஸ்திரேலியாவில் திடீரென கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன், "ஆஸ்திரேலியாவில் திடீரென கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல இருந்தது. ஐ.பி.எல்.போட்டியில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாகச் செயல்பட உதவிக்கரமாக அமைந்தது. கடினமாக, உண்மையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி. இந்திய அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணியின் வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்; பாராட்டினார். ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. பிறந்த குழந்தையைப் பார்ப்பதை விட நாட்டுக்காக ஆடியதைதான் மிக பெருமையாகக் கருதுகிறேன். சேலத்தில் இருந்து எதிர்காலத்தில் பல வீரர்கள் வருவார்கள்" என்றார்.

PRESS MEET Natarajan INDIA CRICKET TEAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe