தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக இருக்கும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு அமைப்பு சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பிட்ட அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களின் விவரங்களை சேகரித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 1500 பேர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.