இந்தியா வந்தது, 3 லட்சம் சீன ரேபிட் கிட்...  -ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு  

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில்,

 India came with 3 lakhs Chinese Rapid Kit ... ICMR announcement

சீனாவில் இருந்து 3 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. பரிசோதனைக்கான இந்த விரைவு பரிசோதனை உபகரணங்கள் தற்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. கரோனாவைகட்டுப்படுத்தவும், அதனால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் இந்த உபகரணங்கள் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் விரைவு பரிசோதனை கருவிகள் சீனாவில் கோரப்பட்ட நிலையில், தற்போது 3 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் வந்துள்ளன.3 லட்சம் கருவிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு தகுதியாக உள்ளனஎன்றும்,இந்த மூன்று லட்சம் பரிசோதனை உபகரணங்களும் அந்தந்தமாநிலங்களுக்கு அனுப்பப்படும் எனவும்ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

china coronavirus Medical
இதையும் படியுங்கள்
Subscribe