Advertisment

“இந்தியா கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியைத் தரும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

India alliance will give Rahul a sweet victory CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

Advertisment

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கும் வீடியோ ஒன்றை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில், அங்குள்ள ஊழியர்கள், கடையின் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்று அவருடன் கைகுலுக்கி மகிழ்கின்றனர். அப்போது அருகில் இருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடை ஊழியரிடம் மைசூர் பாக் கொடுங்கள் என்று கேட்கிறார். யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார் என்று கடையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர் கேட்கிறார். அவரிடம் என் சகோதரர் ஸ்டாலினுக்காக என ராகுல் காந்தி பதிலளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ராகுல் காந்தி, விடை பெற்றார். அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கொடுத்தார். அதனை முதல்வர் மு.க ஸ்டாலினும் மிகவும் மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு கணம் நெகிழ்ச்சி அடைந்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிப்பை சேர்க்கிறேன். என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக கொஞ்சம் மைசூர் பாக் வாங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

India alliance will give Rahul a sweet victory CM MK Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்’ என குறிப்பிட்டு, “என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தரும்” எனத் தெரிவித்துள்ளார்.

sweets campaign
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe