மாமல்லபுரத்தில் சர்வதேச 44வதுசெஸ்ஒலிம்பியாட்போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் இந்தியஓபன்பிரிவு ஏ, பி, சி என மூன்று அணிகளும் பெண்கள் பிரிவில் ஏ, பி, சி என மூன்று அணிகளும் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கின.
இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் எதிர் அணியைச் சேர்ந்த நான்கு வீரர்களை எதிர்கொண்ட நிலையில் முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி உள்ளனர். இந்திய 'ஏ' அணியினர்ஜிம்பாபேஅணியுடனும், 'பி' அணியினர் ஐக்கிய அரபு அமீரக அணியுடனும், 'சி 'அணியினர் தெற்குசூடான்அணியினருடனும் விளையாடினர். மூன்று அணியினரும் தங்களின் எதிர் அணியினரை முழுமையாக வீழ்த்தி வெற்றி கண்டனர். இதில் இந்திய அணியில் களமிறங்கிய தமிழக வீரர்கள்குகேஷ், அதிபன், கார்த்திகேயன், நாராயணன் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.