தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம்அமலில்உள்ள நிலையில் வரும் 15ம் தேதி நாட்டின்74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதில்,
பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் 15 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதேசிய கொடியை ஏற்றுகிறார்.இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசு சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேபோல் சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று சுதந்திர போராட்ட தியாகிகளை பொன்னாடை போர்த்தி வாழ்த்தி மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இனிப்பு பெட்டகத்தை அவர்களது விடுதிகளுக்கேசென்று வழங்கவும்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.