இந்தியாவின்74-ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை, காமராஜர் சாலையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் (08.08.2020) துவங்கிய ஒத்திகை நிகழ்வு இன்றும் தொடர்ந்து நடைபெற்றது. இதில்தமிழக காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், தீயணைப்புதுறையினர் என பல துறை சார்ந்த வீரர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன.

Advertisment

இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்காக காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், அடுத்தகட்ட ஒத்திகைஆகஸ்ட் 13 ஆம் தேதிநடைபெறவிருக்கிறது.