
திருச்சி, திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகில் இருந்து 75வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினையொட்டி விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று (1.4.2022) தொடங்கி வைத்து ஓட்டத்தில் பங்கேற்றார்.

முன்னதாக வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவுத்தூணில் உள்ள மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி ஆகியோரின் உருச்சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆ.ஞானசுகந்தி, வட்டாட்சியர் கா.சேக் முஜிப் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.