
அண்மைக்காலமாகவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில் நேற்று வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளதைபல்வேறு கட்சியினர்கண்டனங்களைத்தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை அரசு உடனே விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)