
விருதுநகர் நகராட்சி அலுவலக கிளார்க் பவானியின் வாயிலிருந்து உதிர்வதெல்லாம் ஆபாச வார்த்தைகள்தான். இன்றைய தினம் (21-ஆம் தேதி), தனது பாணியில் நகராட்சி அலுவலகத்தில் பவானி வசைமழை பொழிந்தபோது, யாரோ ஒருவர் கைபேசியால் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவில் “பெரிய ரோஷக்காரியா.. பெரிய இதுபண்ணிட்டு செருப்பைக் கழற்றி அடிக்கிறான்...நல்லா (வீடியோ) எடு.. எந்த ஆர்.டி.ஓ., எந்த கலெக்டர்கிட்டயும் காட்டு..” என்பது மட்டுமே பிரசுரிக்கக்கூடிய வார்த்தைகளாக உள்ளன.
யார் இந்த பவானி? ஏன் இவ்வளவு கோபம்?
இதே பவானி, ஏற்கனவே அருப்புக்கோட்டை நகராட்சியில் பணிபுரிந்தபோது, எதற்கெடுத்தாலும் வாய்க்குவந்தபடி எல்லோரையும் திட்டியிருக்கிறார். காவல்நிலையத்தில் புகார்கூட கொடுக்கப்பட்டதாம். அங்கிருந்துதான் விருதுநகர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இங்கும் எந்த நேரமும் திட்டிக்கொண்டேயிருக்க, சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார். இன்று பிழைப்பூதியம் பெறவந்தபோது, சகட்டுமேனிக்கு வசைபாட, அலுவலகத்திலிருந்தவர்கள் விறுவிறுவென்று வெளியேறியிருக்கின்றனர்.
கணவரை இழந்த பவானி கைபேசிகூட வைத்துக்கொள்வதில்லை. எந்த நேரமும் டென்ஷனிலேயே இருப்பதால், அவர் குறித்து விரிவாகப் பேச, விருதுநகர் நகராட்சி அலுவலகம் நடுங்குகிறது. செருப்பைக் கழற்றி அடித்ததாக போகிறபோக்கில் பவானி சொல்லும் குற்றச்சாட்டுக்கு, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தால் விளக்கம் அளிக்க முடியவில்லை. பவானியைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், தனது கருத்தைப் பகிர அவர் முன்வந்தால், வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
பவானியின்உளவியல் சிக்கல் என்னவோ?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)