indane gas cylinder attached iron box introduced

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள சுபம் கேஸ் ஏஜென்சி சார்பில், (இண்டேன்)ஐந்து கிலோ கேஸ் சிலிண்டருன் இயங்கக் கூடிய கேஸ் அயன் பாக்ஸ் அறிமுகப்படுத்துதல் மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நேற்று (02/03/2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சுபம் கேஸ் ஏஜென்சியின் நிர்வாக இயக்குனர்கள் சித்தார்த்தன் தலைமை தாங்க, புகழேந்தி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மண்டல முதன்மை மேலாளர்ராஜேஷ், முதுநிலை விற்பனை மேலாளர் ஜெயப்பிரகாஷ், புதுவைபகுதி விற்பனை மேலாளர்வில்லியம் கேரி ஆகியோர் கலந்து கொண்டு எரிவாயு மூலம் இயங்கும் அயன் பாக்ஸின் நன்மைகள், லாபங்கள் மற்றும் அதன் செயல் தன்மையையும் விரிவாக விளக்கினர்.

இந்நிகழ்ச்சியில்,சிதம்பரம் பகுதியில் இருக்கும் சலவைத் தொழிலாளர்கள் மற்றும் சிதம்பரம் பகுதி இன்டேன் கேஸ் விநியோகஸ்தர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.