Advertisment

'பெண்களை துன்புறுத்தினால் தண்டனை அதிகரிப்பு'-சட்டத்திருத்த மசோதா தாக்கல்

mkstalin

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக 'யார் அந்த சார்?' என்ற பேஜுடன் வந்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில்இன்று சட்டப்பேரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்க செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து வருகிறார்.

Advertisment

இந்த திருத்த மசோதாவில் பாலியல் வழக்குகளில் சிக்கினால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களை பின்தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை; பிணையில் விடுவிக்காத படி சிறைப்படுத்தப்படும்; குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படும்; பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை; பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வழி வகை; மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை; ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe