ADVERTISEMENT

வேலூரில் கிடுகிடுவென உயரும் கரோனா தொற்று எண்ணிக்கை!

09:47 PM Jun 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வேலூர் மாவட்டம் கட்டுப்படுத்திவைத்திருந்தது. கடந்த ஒரு வாரமாக அதன் எண்ணிக்கை கிடுகிடுவென உயரத்துவங்கியுள்ளது. ஜீன் 21ஆம் தேதி மட்டும் 110 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என வந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது மூன்று இலக்கத்துக்கு மாறியுள்ளது. ஜீன் 20ஆம் தேதி மாலை வரை 487 கரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஒரே நாளில் 110 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக ரிசல்ட் வந்ததன் அடிப்படையில் ஜீன் 21ஆம் தேதி மாலை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 597 பேருாக உயர்ந்துள்ளது. இவர்கள் வேலூர், குடியாத்தம் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிக்கப்பட்ட 487 பேரில் 403 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேலூர் மாநகரத்துக்குள் சாராதி மாளிகை, பர்மா பஜார் போன்ற கடைகள், மார்க்கெட் பகுதிகளில் முழுவதும் தடுப்பு போட்டு கடைகள் திறக்காதபடி செய்துள்ளனர் அதிகாரிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT