
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,556 லிருந்து குறைந்து 1,544 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,55,210 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 194 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 169 என்று இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று கோவையில் 206 ஆக இருந்த பாதிப்பு இன்று 217 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில்19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,055 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,205 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,576 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,74,518 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை-217, ஈரோடு-115, செங்கல்பட்டு-112, திருவள்ளூர்-69, தஞ்சை-53, நாமக்கல்-65, சேலம்-57, திருச்சி-56, திருப்பூர்-70 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, தஞ்சை மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு மேல் தொடர்ந்து தொற்று பதிவாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)