Advertisment

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

Increased release of excess water at Mettur Dam

காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் 43 மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நேற்று மாலை மேட்டூர் அணை நீர்மட்டம் 119.02 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது.

Advertisment

அணையின் நீர் இருப்பு 92.56 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1.48 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக 1.28 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்பொழுது 16 கண் மதகு மழைக்கால வெள்ளநீர் போக்கில் 1.48 லட்சம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் முகாம்களுக்கு செல்ல ஒலிபெருக்கி மூலம் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தல் கொடுத்துவருகின்றனர்.

Advertisment
water
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe