








Published on 09/11/2021 | Edited on 09/11/2021
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதனால் கடந்த நான்கு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
பல்வேறு இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளதால் இயல்பாக வெளியே செல்ல முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே போல் கொளத்தூர் தொகுதி பெரவல்லூர் காவல் நிலையம் ஜவஹர் நகர் 6வது பிரதான சாலையில் மழை நீர் இடுப்பளவு உள்ளதால் அங்குள்ள மக்கள் படகு மூலமாக பயணித்து வருகின்றனர்.