cv

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்பட்டு வருகிறது கோகிலா சேகர் என்கிற மகப்பேறு மருத்துவமனை. ஈரோட்டின் பிரபலமான மகப்பேறு மருத்துவமனையான இதில் மகப்பேற்றின்போது தாய் - சேய் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் அடிப்படையில் ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி மருத்துவ கண்காணிப்புக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தினார்.

Advertisment

மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தியதில் மயக்க மருந்து மற்றும் தடுப்பூசிகள் காலாவதி ஆகி இருப்பதும், விதிமுறைகளை மீறி படுக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

Advertisment

மேலும் ஸ்கேன் சென்டருக்கு தனியாக அறை ஒதுக்கப்படாமல் சிகிச்சை அளித்ததும் தெரிய வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் சென்டருக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் 15 நாட்களுக்குள் மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் , அதுவரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் தடை விதித்தனர். ஈரோட்டில் மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த மருத்துவமனை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.