Increased corona in the neighboring state ... Today's corona situation in Tamil Nadu!

Advertisment

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,585 லிருந்து குறைந்து 1,573 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,56,985 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 170 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 165என்று இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,352 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,797 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை 25,52,507 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவையில்-181, ஈரோடு-130, செங்கல்பட்டு-90, தஞ்சை-84 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா ஓரளவிற்கு கட்டுக்குள்இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இன்று 31,445 பேருக்கு புதிதாக கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் ஓணம் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு அண்மையில் கரோனாகட்டுப்பாடுகளில்தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகளாலேயே கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் செப்.1 ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தகுந்தது.