Advertisment

அதிகரித்த கரோனா நோய் தொற்று... பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

Increased corona infection ... Devotees are not allowed in the famous temples

Advertisment

திருச்சி மாவட்டத்தில் தற்போது கரோனா நோய் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், திருச்சியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் நுழைவாயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற பதாகைகளை வைத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் திருவானைக் கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், சமயபுரம் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்றும் (02.08.2021)நாளையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த காவிரிக் கரையோரங்களில் பொதுமக்கள் கூடாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

closed Srirangam temple trichy
இதையும் படியுங்கள்
Subscribe