Skip to main content

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா!! ஒரே வாரத்தில் 100 பேர் பாதிப்பு!!

Published on 21/06/2020 | Edited on 21/06/2020

 

 Increased corona in Dindigul district - 100 people affected in one week !!

 

ஊரடங்கு தளர்வுக்குப்பின் திண்டுக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கரோனா தொற்று எண்ணிக்கை 311 ஆக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டபின், போக்குவரத்துக்கு அனுமதி, ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக வெளியூர்களில் தங்கி இருந்த நபர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். மண்டல வாரியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு வரத் தொடங்கினர்.

இதனால் தினந்தோறும் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, பழனியை சேர்ந்த 37 வயது பெண், அவரது 13 வயது மகன், மகள், பதினொரு வயது மகன், சின்னாளபட்டி நடுப்பட்டி சேர்ந்த 30 வயது பெண், அவரது 11 மாத கைக்குழந்தை, பழனியை சேர்ந்த 30 வயது ஆண், கோபால்பட்டியை சேர்ந்த 36 வயது பெண், வத்தலகுண்டு கணவாய் பட்டியை சேர்ந்த 24 வயது பெண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 26 வயது ஆண், திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த 29 வயது பெண், நத்தம் சிறு குடியை சேர்ந்த 9 வயது சிறுமி, வடமதுரை செந்துறை சேர்ந்த 47 வயது ஆண், நத்தம் அண்ணாநகர் சேர்ந்த 33 வயது பெண், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த 62 வயது முதியவர், அவரது 57 வயது மனைவி, 35 வயது மகன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 311 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் பெரும் பீதியில் இருக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்