/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Z45.jpg)
சென்னையில் பல இடங்களில்நேற்றிரவு முதலேகனமழை தொடர்ச்சியாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் நிறைந்து வருகிறது. இதனையடுத்து நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு நடவடிக்கையை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் தற்போது 2 ஆயிரம் கன அடி நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)