Published on 09/11/2021 | Edited on 09/11/2021

தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், இன்றும் (09.11.2021) 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது. தற்போது மதுராந்தகம் ஏரியிலிருந்து 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவான 23.3 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேபோல் திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தற்போது பூண்டி ஏரியிலிருந்து 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக 4,040 கனஅடி நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.