
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில் 42 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பதால் நீர் திறப்பு 50,000 கன அடிவரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரை பகுதிகளின் ஆபத்தான இடங்களில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)