Advertisment

இரவுமுதல் இடைவிடாது பெய்துவரும் கனமழை - செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

kl

Advertisment

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை இன்னும் தீவிரமாக இருந்துவருகிறது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றதுபோல் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இரவு முதல் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 5,240 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியிலிருந்து தொடர்ந்து 5வது நாளாக 2,000 கன அடிக்கு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவை ஏற்பட்டால் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Lake rain
இதையும் படியுங்கள்
Subscribe