சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் காய்கறி விலை உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டிக்கிறோம். அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டிக்கிறோம். இவை அனைத்தும் கண்டும் காணாமலும் இருந்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டிக்கிறோம்’ என கோஷங்களை எழுப்பினர்.