/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erode-art_2.jpg)
நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் பரிந்துரையின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சி மாநில நிறுவனர் மற்றும் தலைவர் வடிவேல் ராமன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக நீதி மக்கள் கட்சியின் மாநில அளவிலான முதல் மாநாட்டில் அவர் விடுத்துள்ள கோரிக்கைகள், "அருந்ததியர்கள் தூய்மைப் பணிகளைச் செய்வதால்மற்றவர்கள் அவர்களை அவமதிக்கின்றனர். எனவே, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து சமுதாய மக்களும் இத்தகைய பணிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். சக்கிலியர், மாதிகா, பகடை, மாதாரி, தோட்டி, செம்மான், ஆதி ஆந்திரா ஆகிய அனைத்து உட்பிரிவினரையும் அருந்ததியர் என அழைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எஸ்சிக்கள் 3 உட்பிரிவுகளாக இருப்பதால் - ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் - ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதி அல்லது எஸ்சி நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
கலப்புத்திருமணம் செய்பவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மானியம் ரூபாய் 10 லட்சமாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் ஆண்டு வருமானம் ரூபாய் 72000 கீழ் சான்றிதழ் வழங்காததால் ஏழைகள் அரசின் சலுகை பெற முடிவதில்லை. எனவே ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 2 லட்சமாக உயர்த்த வேண்டும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)