Advertisment

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு! சட்டப்பேரவையில் நிறைவேற்றம் !

Increase in punishment for activities against women! Execution in the Legislature!

Advertisment

இந்திய தண்டனை தொகுப்பு சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அந்த மசோதாவில், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கானதண்டனைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் 354-பி பிரிவில், ஆடைகளை அகற்ற வைக்கும் எண்ணத்துடன் பெண்களைத் தாக்கிய குற்றம் நிரூபனமானால் 7 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள தண்டனை இனி 10 ஆண்டுகள் என மாற்றம் செய்யப்படுகிறது.பெண்களை அச்சுறுத்தல், வெறுப்பேற்றும் வகையில் பின்தொடர்தல், பெண் மறுத்தும் அவருடன் தனிமையில் உரையாடுதல் போன்றவைகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மைனர் பெண்களைப் பாலியல்தொழிலில்ஈடுபடுத்துதல் பிரிவு 372, மைனர் பெண்களை விலைக்கு அல்லது வாடகைக்கு வாங்குதல் என்ற பிரிவு 373 ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட மசோதா ஒரு மனதாக பேரவையில்நேற்று (05.02.2021) நிறைவேற்றப்பட்டுள்ளது.

CV Shanmugam tn assembly women safety
இதையும் படியுங்கள்
Subscribe