Advertisment

நடவு வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Increase in price of planting onions

சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை விண்ணைத்தொட்ட நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.

Advertisment

ஏற்கனவே முந்தைய காலகட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்திருந்தது. தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்தது. திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் பரிசு வழங்கும் அளவுக்கு அன்றைய காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருந்தது.

Advertisment

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் நடவு பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வியாபாரிகளிடம் இருந்து பழைய சின்ன வெங்காயத்தை வாங்கி நடவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் பழைய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

Market ottanchadram onion
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe