/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GHFGHGH.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தீபாவளியை முன்னிட்டு கீரமங்கலம் மலர் கமிசன் கடைகளில் முல்லைப் பூ கிலோ ரூபாய் ஆயிரத்தை தொட்டது.
கீரமங்கலத்தில்தீபாவளியை முன்னிட்டு கீரமங்கலம் மலர் கமிசன் கடைகளில் முல்லை மற்றும் கனகாம்பரம் பூக்கள் ஒரு கிலோ ரூ. 1000 க்கும் மல்லிகை ரூ. 800 க்கும் விற்பனையானது. மலர் உற்பத்தி மந்தமாக இருந்ததால் விலை ஏற்றம் காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்கள் மற்றும் மழையூர், வம்பன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய விவசாயம் மலர்கள் உற்பத்திதான்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலர்களை கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலத்தில் உள்ள கமிசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மலர்களை வாங்கிச் செல்ல கமிசன் கடைகளுக்கு பட்டுக்கோட்டை, திருவாரூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, நாகபட்டிணம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி மற்றும் பல ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த பூக்கள் பண்டிகை காலங்களில் தேவைகள் அதிகம் இருப்பதால் விற்பனை விலையும் உயர்வது வழக்கம். அது போல தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை கீரமங்கலம் மலர் சந்தைக்கு மலர்கள் வந்தது. மல்லிகை போன்ற மலர்கள் உற்பத்தி குறைவாக இருந்தது.
இந்த பூக்கள் கமிசன் கடைகளில் ஒரு கிலோ முல்லை பூ, கனகாம்பரம் பூக்கள் ரூ. 1000, க்கும், மல்லிகை, காட்டுமல்லி ஆகிய பூக்கள் ஒரு கிலோ ரூ. 800 க்கும், அரளி ரூ. 60, ரோசா ரூ. 60, சம்பங்கி ரூ. 60 க்கும் மலர்கள் விற்பனை செய்யப்பட்டது. திங்கள் கிழமை மேலும் விலை உயரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)