வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

Increase in price of cylinder for commercial use

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 101 விலையுயர்ந்து தற்போது 1999 என விறபனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்பவீட்டு உபயோகமற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக கச்சாஎண்ணெய் விலை அதிகரித்ததைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை பல மடங்குஅதிகரித்தது.

பின்னர் சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய்யின் மதிப்பு குறைந்ததைத்தொடர்ந்து மீண்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிவாயு சிலிண்டரின் விலைக் குறைந்தது. இந்த நிலையில் தற்போது, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தற்போது வணிகப் பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101 உயர்ந்து ரூ, 1999 ஆக விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe