'Increase in pension for former MLAs'-Chief Minister's announcement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் கலைஞர் நூற்றாண்டை ஒட்டி சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

Advertisment

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தைஅதிகரித்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி ஜூன் மாதத்திலிருந்து இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். முன்னாள் எம்எல்ஏக்களின் குடும்ப ஓய்வூதியம் 12,000 ரூபாயிருந்து 15,000 ரூபாயாகஉயர்த்தி வழங்கப்படும். முன்னாள் எம்எல்ஏ மற்றும் மேலவை உறுப்பினர்களின் மருத்துவப்படி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisment