Advertisment

ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்; நீர்வீழ்ச்சிக்கு வருகை அதிகரிப்பு!

Increase in the number of people visiting Jalagamparai Falls

கோடை காலத்தில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகமாக வெப்பம் இருந்தது. இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு பொதுமக்களை மிகவும் பாதித்தது, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டிருந்தனர். ஹீட் ஸ்ட்ரோக், வெப்பக்காய்ச்சல் போன்றவற்றால் குழந்தைகளும், முதியவர்களும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலையே இருந்தது. அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் அதிகமாக இருந்தன.

Advertisment

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருவது, அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து இருப்பது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

Advertisment

Increase in the number of people visiting Jalagamparai Falls

இங்குப் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளதால் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம்.இந்த நீர்வீழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். தற்சமயம் சில தினங்களாக பெய்த கோடை மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தற்போது நீர் வரத்து தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புதுப்பொலிவுடன் சிறுவர்களை கவறும் வண்ணம் பூங்கா, வனவிலங்குகளின் ஓவியங்கள், உடைமாற்றும் அறை, மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க கூடாரம் உள்ளிட்டவையைப் புதுப்பொலிவுடன் அமைத்துள்ளது.

இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா,பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளித்து விட்டுச் செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து வருகின்ற பத்தாம் தேதி பள்ளி தொடங்க உள்ளதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து உற்சாகமாக வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rain TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe