Increase in air pollution in Chennai

Advertisment

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச்சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்தது.

இந்த நிலையில், சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்கத்தொடங்கியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் - 178, அரும்பாக்கம் - 159, ராயபுரம் - 115, வேளச்சேரி - 117 எனச் சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியுள்ளது.