Skip to main content

அரசு அங்கன்வாடி முட்டை விநியோகிப்பில் முறைகேடா !!?? ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் வருமான வரித்துறையினர் ரைடு !!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

 

 

it

 

 

 

தமிழக நுகர்பொருள் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுகதேவியின் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் கிறிர்ஸ்டி பைர்ட் கிராம் என்ற நிறுவனம். இந்த நிறுவனம்தான் அரசுபள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டை மற்றும் சத்துமாவு போன்றவற்றை விநியோகித்து வருகிறது. 

 

இந்நிலையியில் இந்த நிறுவனத்தோடு தொடர்புடைய சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கிவரும் நிறுவனங்ககளில் 70 மேற்பட்ட இடங்களில்  இன்று வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்றுவருகிறது. 

 

 

 

 

முட்டை விநியோகப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த இந்த புகாரில் கிறிர்ஸ்டி பைர்ட் கிராம் நிறுவனத்தோடு தொடர்புடைய சென்னையை சேர்ந்த 37 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

இந்நிலையில் தமிழக நுகர்பொருள் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுகதேவிக்கு இந்த முறைகேட்டில் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
IAS officers job transfer!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த முருகேஷ் வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர்க்கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த நடராஜன் ஐஏஎஸ், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக முதன்மைச் செயலராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ், வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியை பணியிட மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கற்பகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.