தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தொடர்ச்சியாக அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவரும் நிலையில், சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தயாரிப்பாளர் ஜெயக்குமார், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்வசனம் எழுதிய திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.