கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத பிரச்சாரக் கூட்டங்கள் நடத்திவரும் பால் தினகரினின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். காலை எட்டு மணிக்குத் தொடங்கிய சோதனை, சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்திவருகின்றனர்.
கல்வி நிறுவனம், ஜெபக் கூட்டங்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாகவும், வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய முதலீடுகள் குறித்தும் சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் முதல்கட்டமாக வெளிநாட்டிலிருந்து வரும் முதலீடு சம்பந்தமான ஆவணங்கள் கைப்பற்றியிருப்பதாக வருமான வரித்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சோதனை முடிந்த பிறகுதான் முழு விவரங்களும் தெரியவரும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th-4_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th-3_12.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th-1_17.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th-2_13.jpg)