/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mr 23.jpg)
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான எ.வ.வேலு வீடுகள், திருவண்ணாமலையில் உள்ள கல்லூரிகள், தொழில்நிறுவனங்களில் மார்ச் 25- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு தொடங்கியது வருமான வரித்துறை சோதனை. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடந்தசோதனை,மார்ச் 26- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு முடிந்தது.
ரெய்டு முடிவுக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் ஒரு குழுவினர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்றனர். இன்று மார்ச் 26- ஆம் தேதி பௌர்ணமி முன் பிரதோஷம் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ராஜகோபுரம் வழியாக வருமான வரித்துறை அதிகாரிகளின் ஒரு பிரிவினர் சுவாமி தரிசனத்துக்காக வந்தனர். அவர்கள் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு, பின்னர் அண்ணாமலையாரைத் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)