சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள பி.எஸ்.கே. குழுமத்திற்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி.எஸ்.கே. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் மீண்டும் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.