Advertisment

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Income Tax Department raids S.P. Velumani's friend's house

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரான சந்திரசேகர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் உள்ளார்.

Advertisment

முன்னதாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியபோது அவருக்கு நெருக்கமானவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது. அந்த வகையில், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றும் சந்திரசேகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை சோதனைக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe