
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (25.02.2025) சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சொந்தமாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள 34 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள நந்தனம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.