Advertisment

சென்னையில் வருமான வரித்துறை சோதனை!

Income tax department check in Chennai

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள இரு தொழிலதிபர்களின் வீடுகளில் இன்று (09.04.2024) காலை 07.00 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை வைத்துள்ள சஞ்சய் என்பவரது வீட்டிலும், சுனில் என்பவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்னதாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் சந்தோம் பகுதியில் உள்ள வீட்டிலும், சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்திலும், சென்னை தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல உணவகத்திற்குச் சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

vannarapettai Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe