Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் வருமானவரி சோதனை (படங்கள்)

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

சென்னை தேனாம்பேட்டை எண் 21/10, வெங்கட்ரத்தினம் தெருவில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசி வீட்டில்  வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

திருச்சியில் தொடரும் ஐடி ரெய்டு; விடிய விடிய சோதனை!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
IT Raid Continues in Trichy; Test at dawn!

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்களில் முக்கியமான ஒரு சில அமைச்சர்கள் பதவி வகிக்கும் துறைகளில் இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் தேர்தல் வாக்குறுதி பட்டியல் வெளியிட்டபோது, அதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் ராஜசேகர் பேசியதாவது “விரைவில் அமைச்சர் நேரு இந்த திருச்சியை விட்டு புறப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமலாக்கத் துறையும், வருமானவரித்துறையும் மிக விரைவில் அவரிடம் சோதனை நடத்தும்” என்று கூறினார். 

அவர் இந்தத் தகவலை கூறிய அதே வேளையில் நீர்வள ஆதாரத்துறையின் மூத்த பொறியாளர் பன்னீர் செல்வத்தின் வீட்டில் வருமானவரித்துறையினர் நேற்று காலை முதல் இன்று காலை வரை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் தற்போது வாடகை வீட்டில் தங்கி வரும் நிலையில் இந்த சோதனை இன்று வரை முடிவுக்கு வராமல் தொடர்வது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7மணியில் இருந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையுடன் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுக அரசு பொறுப்பேற்ற முதல் பொதுப்பணித்துறை,  நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அரசு பணிகளை இவர் தான் எல்லா ஒப்பந்ததாரர்களுக்கும் பிரித்து கொடுப்பார். எனவே தான் தேர்தல் பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் இவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் பின்னணியில் யார் இருப்பது என்பது குறித்து நாம் விசாரித்த போது திமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மூலமாகத்தான்  இந்த தகவல் வருமான வரித்துறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அதே போல் தான் இன்று அறந்தாங்கியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஸ்ரீ இன்ஃப்ரா டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர்கள் ரவி மற்றும் தியாகராஜனின் திருச்சி வீடு அலுவலகம் தர்மபுரி பெரம்பலூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அமைச்சர் நேருவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய ஒப்பந்ததாரர்கள்  வீட்டில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அமைச்சர் எவ.வேலுவுக்கு நெருக்கமாக உள்ள முக்கிய ஒப்பந்ததாரரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.