2015-16 நிதியாண்டில் ரூ.7.78 கோடி வருமானத்தை மறைத்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரிய கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அடுத்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் அஜராகாவிட்டால், பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்றச்சாட்டு பதிவுக்காக ஜனவரி 21-ஆம் தேதிக்கு வருமான வரித்துறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.