சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆலைக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் புரசைவாக்கம் கிளெமென்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.