Advertisment

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு!

ப

Advertisment

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாதமாக நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று (07.09.2021) அவை கூடியதும் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த 1.5 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற இருக்கிறார்கள். மேலும், சத்துணவு பணியார்களின் ஓய்வுபெறும் வயது 58இல் இருந்து 60ஆக மாற்றப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

Government employees stalin
இதையும் படியுங்கள்
Subscribe